அநேகமாக சரியாகத் தான் சொல்கிறார்

திரையரங்கத்திற்கு வெளியே
மரத்தின் நிழலில் ..
எதிர்காலத்தை பற்றி
இன்னும் நம்பிக்கைகளோடு
கைரேகை பார்த்து
ஜோசியம் சொல்பவர் முன்னால்..
குத்தங்காலிட்டு..
தலையில் கைவத்து பொறுமையாய்
தன் எதிர்காலம் கேட்கும்
சில குடிமகன்களை எதிர்பார்த்து இருக்க
பிற்பகலில் ..எங்கிருந்தோ ஒருவர் வர..
தனது எதிர்காலத்தின் மீதான
ஜோசியரின் நம்பிக்கை..
கண்களில் ஒளியாக மாறி வீசிட..

*****
வந்தவர் எடுத்த ஒரு சீட்டில் ..
வீர ஆஞ்சநேயர் வந்திருக்கார் என்று
சொல்லி ஆரம்பித்து..
ஒருவழியாய் ஜோசியம் சொல்லி முடித்த பின்
கிடைத்த பத்து ரூபாய் நோட்டு..
அவரைப் பார்த்து சிரித்தது..
..அன்றைய பொழுது அதோடு முடிந்தது..
*****
பக்கத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ..
மாதமொருமுறை வரும்
இன்னொரு ஜோசியரின் ..
பெட்டி நிறைந்தது!
..
இருவரில் மரத்தின் கீழ்
இருந்தவருக்கு ..கொஞ்சம்
ஜோசியம் தெரியும்!

எழுதியவர் : கருணா (1-Oct-15, 3:14 pm)
பார்வை : 80

மேலே