முதியோர்

முதுமை அல்ல முதன்மை நீங்கள்!
முதியோர் அல்ல பெரியோர் நீங்கள் !

வாழ்வை உணர்ந்த உச்சம் நீங்கள்!
நீங்கள் விதைத்த எச்சம் நாங்கள்!

உங்கள் அனுபவம் எங்களுக்கு உரைத்தால் உலகம் முழுதும் வெல்வோம் நாங்கள்!

எஞ்சி இருக்கும் நாகரீகம் நீங்கள்!
மிஞ்சி இருக்கும் மரியாதை நீங்கள்!

உங்கள் வழியை மறுத்ததினால்தான் உய்வதறியாது தறி கெட்டோம் நாங்கள்!

எங்கள் வாழ்வில் ஏற்றம் பெறவே உங்களை வாழ்த்தி தலை வணங்குகிறோம் நாங்கள்!

முதியோர் தின நல் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : (1-Oct-15, 4:33 pm)
Tanglish : muthiyor
பார்வை : 107

மேலே