இரவுகளை இம்சிக்கும் என் இனிய இராவணனே

இரவுகளை இம்சிக்கும் என் இனிய
இராவணனே.....
தினமும் உன் மண்டோதரியாக........!
ஏக்கங்களோடு தூக்கங்கள்
இன்றி மாற்றங்கள்
வருமென காத்துக் கடக்கிறேன்.
என் பல நடு நிசிப் பொழுதுகளை.....!
மேற்கினில் விதைத்தது
தினமும் கிழக்கினில்
முளைத்து விடுகிறது.....
ஆனால்
மீண்டும் மாற்றம் இல்லா என்
இரவுகள்.....
ஏழைவீட்டு பாயாசத்தின்
முந்திரி பருப்பினை போல
நம் சந்திப்புகள் அங்கொன்றும்
இன்கொன்றுமாய்....தான்
இருந்தாலும் ....
இரை
மீட்கும் பசுவினைப் போல் -நம் நினைவுகளை
மீட்டிப் பசியாறிக் கொள்கிறேன்.

எழுதியவர் : thadchu (1-Oct-15, 4:21 pm)
பார்வை : 103

மேலே