முதல் எழுத்து
கவிதை எழுத முனைகயில்
கலைந்த எழுத்துகளெல்லாம்
கை கோர்த்து நிற்கின்றன
உன் பெயராய் மாறிவிட
கவிதையாய் - நீ
இருப்பதால்
உன் பெயரில் இல்லாத
எழுத்துக்கள்
கண்ணீரால்
கரைகின்றது
உன்
உச்சரிப்பிலாவது
உயிர்பிக்கலாம் என்றால்
மௌனத்தால்
மரிக்கச்செய்கிறாய்
இறுதியாய்
இருந்த
எழுத்துகளுக்குள்
வன்முரை பற்றிகொண்டதாம்-நீ
வாசித்த எழுத்துகளில்
முதன்மையானவன்
நானென்று
அவைகளுக்கு
தெரியுமா
என்
உயிர் எழுத்துக்கள்
அவளென்று