பாட்டிக்கதை பழையக்கதையா

பெத்த மனம் பித்து,
பிள்ளை மனம் கல்லு என்பது மாறி,
பெத்த மனம் கல்லுயென்று சில
பிள்ளை மனம் பித்தாகி போனதாயென்ன?

அம்மா தெய்வங்களை ,
காப்பாக கோவில் கருவறையில் இல்லை,
தவறாக சிறை அறையில் வைக்கிறார்கள்,

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதை தவறாக புரிந்துக் கொண்ட கூட்டம் போலும்,

தாய்மார்களே,ஓர் வேண்டுக்கோள்,

பாசம் இல்லாத மகனைப் பெற்றது,
உங்கள் குற்றம் அல்ல,

குற்றத்தின் பார்வையில் குற்றவாளியாக இருப்பது உங்கள் பிள்ளையின் குற்றம்,

நீங்கள் அவர்களை ஈங்குபெட்டர்(inkubator) குழந்தையாக நினைக்கிறிர்கள்,
ஆனால்,
இங்கு பெட்டர் குழந்தையே இல்லையென நான் நினைக்கிறேன்,

பாட்டிக்கதையெல்லாம் பழசு ஆனாதாயென்ன?

காலப்போக்கில்,

பாட்டியே பழையக்கதை ஆனால்,

ஆச்சிரியக்குறி இல்லை,

அது அவமானக்குறி,

அந்த குறி உங்களை குறிப் பார்க்காமல் இருக்க
நீங்கள் நல்ல குறிக்கோளை குறித்துக் கொள்ளுங்கள்,


முதியோர் இல்லங்களுக்கு மூடுதினம்,
அதுவே உண்மையான முதியோர்தினம்,,,,,

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (1-Oct-15, 9:54 pm)
பார்வை : 84

மேலே