ஹரியும் அறணுமே இந்த மூடர்களை திருத்த வேண்டும்

திருவேங்கடம் என்னும் திருப்பதி. 12 ஆழ்வார்களில் தொண்டரடி பொடியாழ்வார், மதுரக்கவியாழ்வார் தவிர ஏனைய 10 ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் திருப்பதி. முருக பக்தரான அருணகிரி நாதரோ பச்சைப்புயல் மெச்சத்தகு மறுகோனே, மாலுக்கு இனிய மறுகோனே என்று பல திருப்புகழ் பாக்களில் முருகனை பாடுவதோடு மாலையும் சேர்த்தே பாடுகிறார். அருணகிரி நாதரின் முதல் திருப்புகழான முத்தைத்தறு திருப்புகழில்
பத்துத் தலை தத்தக் கணை தொடு ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே என்கிறார். இதன் பொருள்.
பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி.
கணை தொ(ட்)டு = அம்பைச் செலுத்தியும்.
ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு.பொருது = (கடலைக்) கடைந்தும்.
ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை.
வட்ட = வட்ட வடிவமாக உள்ள.
திகிரியில் = சக்கரத்தினால். இரவாக = இரவாகச் செய்தும்.
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய.
பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்.
மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே.
பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து.
ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்.
அருள்வதும். ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?
அதுமட்டுமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சிலப்பதிகாரம் திருவேங்கடம் பற்றியும், திருப்பதி பற்றியும் செப்புவதை கேளுங்கள்.
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்.
உயர்ந்த மலை உச்சியிலிருந்து அருவி நீர் கொட்டிக்கொண்டிருக்க. சூரியனும், சந்திரனும் எதிரெதிரே எழுந்து நிற்க இடைப்பட்ட இம்மலையில் மின்னலை ஆடையாக உடுத்திக்கொண்டு ஓடி நீலமேகம் நிற்பது போல் எழுந்தருளி பகைவெல்லும் ஆழியும், பால் நிறம் போன்று சங்கும், இருபுறமும் திகழ தாமரையைக் கரத்தில் ஏந்தி, கிளர்ந்தெழும் ஆரத்தை மார்பில் பூண்டு, தூய பட்டாடை உடுத்தி செங்கண் நெடியோன் நிற்கிறார் என்கிறார் இளங்கோவடிகள்.
இதை தவிர்த்து பல சங்க இலக்கியங்களில் திருமலையில் கொலுவீ ற்றிறுப்பது சாட்ஷாத் கோவிந்த ராஜனே என்று சொல்ல வேலை, வெட்டி இல்லாத சிலர் இதற்க்கு முன் அது முருகன் கோவில், அம்மன் கோவில் என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டனர். இந்த மாதம் 20ம் தேதி ஒரு வெண்ணை திருப்பதியில் இருப்பது உண்மையில் முருகனாம். இதைக்கூட பொறுத்து கொள்ளலாம். ஆனால்? பத்து ஆழ்வார்கள் திருப்பதி பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்க. ஒரு ஆழ்வார்களால் கூட திருப்பதி பெருமாள் மங்களாசாசனம் ெய்யப்படவில்லை என்று அந்த பதிவில், வெண்ணை உளற 1300க்கும் மேற்பட்ட கேனைகள் அதற்க்கு லைக், 4300க்கும் மேல் share. அந்த வெண்ணையின் பதிவை ஒரு தொண்ணை coppy, பேஸ்ட் பண்ணி வேறு போட்டது. ஹிந்து மதத்தை இழிவுபடுத்த நாஸ்திகவாதிகளோ, பிற மதத்தினரோ தேவையில்லை. இதுபோன்ற ஹிந்து மதத்தில் உள்ள முட்டாள்களே போதும். உண்மை ஆன்மீக வாதிக்கு ஹரியும், சிவனும் மட்டுமல்ல. ராம், ரஹீம், கிருஷ்ணர், கிருஸ்த்து அனைத்துமே ஒன்று தான்.
ரிக் வேதம்- ஏகம் சத் விரோ பஹுதா வதந்தி” (ஒரு கடவுளை அறிந்தவர்கள் அவரவர் அனுபவத்திகு ஏற்ப சொல்கிறார்கள்.]
ஹரியும் அறணுமே இந்த மூடர்களை திருத்த வேண்டும்