பனிப்பாறை

உறைந்தே கிடக்கும் பனிப்பாறையாய்
பாலைவன நடுவினில் என் காதல்,
கதிரவன் எதிர்திசையில்
வண்ணங்களில்லா வானவில்லை தோற்றுவித்ததோ?
அதோ தெரிகிறது!
நீயும் எங்கோயிருந்து காண்கிறாய்!
யாரிடமும் சொல்லிவிடாதே, நம்பமாட்டார்கள்!

உருகியதோ அந்த பனிப்பாறை,
கானல் நீரில் கால் கழுவச்செல்கிறேன்.
உன் பிம்பம் தெரியாமலிருக்கட்டும்!

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (1-Oct-15, 11:21 pm)
பார்வை : 275

மேலே