மனிதம் மறந்த மனிதன்

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்,
வாழும் வகை புரிந்து கொண்டான்,
மனிதனாக வாழ மட்டும் ஏனோ தெரியவில்லை?

இந்த நெடு நாளைய கேள்விக்கு பதில்
கிடைத்தது இன்று..

இயற்கையை சமைத்த மனிதனுக்கு
மனிதத்தை சமைக்க தெரியாமற்போகுமா?

ஐம்புலத்தை
அடக்கினால் மனிதன் தெய்வமாகலாம்,
அதையே சென்சார் செய்தால்
மனிதம் என்ற மகத்துவம் இழக்கலாம்.

மக்கள்
எதை பார்க்க வேண்டும்,
எதை கேட்க வேண்டும்,
எதை பேச வேண்டும்
என்பதை
அரசியல்வாதிகளும்,
அவனுக்கு
ஜால்றா தட்டும்
மீடியாக்களுமே
முடிவு செய்கின்றன.

எழுதியவர் : செல்வமணி (2-Oct-15, 12:37 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 947

மேலே