அகிம்சா மூர்த்தியும் – அக்டோபர்-2ம்

நவராத்திரிக்கு கட்டியும்
கூறும் முகமாக
கலைக்கட்டிவிடும் உன்
பிறந்தநாள் கொண்டாட்டம்!

ராஜ்க்காட்டில்
கட்சி பாகுபாடின்றி
மாலைகள் அணிவித்து
மண்டியிட்டு நமஸ்க்காரங்கள்!

‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடாமல்
போஜனம் கொள்வதில்லையாம்
‘கஜல்’- பாடகர்களுக்கு…!
அது நிஜமா என்பது
நி நம்பும் ஸ்ரீஇராமனுக்கே வெளிச்சம்!

நவநாகரீக உடையணிபவர்கள்
கதராடை தயாரிக்க உதவும்
ராட்டிணங்களை சுற்றுகிறார்கள்,
கேட்டால்
உன்மேல் உள்ள அதிக பற்றாம்!

ரிசர்வ் வங்கி
அச்சடிக்கும் ரூபாய் நோட்டில் மட்டும்
உன்னுருவம் அச்சடிக்கப்படாவிட்டால்
அத்துனை இந்தியனும் உன்னை
எப்போதோ மறந்திருப்பான்!

கோட்சேவின் துப்பாக்கி
துளைத்தெடுத்த தருணத்திலும்
பொக்கை வாயால் சிரித்தபடி
ஹே ராம் என்றாய்..!

அயோத்தியில் இருந்து
இராமபிரான் வருவதற்குள்
எமபிரான் உன்னை
எமலோகம் அனுப்பி விட்டான்

தேசத் தந்தை நீ
உன் கழுத்துக்கு விழும் மாலைகள்
கணக்கில் அடங்கா..!
ஆனால்
அடுத்த நாள்
உன் தலையில் அமர்ந்து
காக்கா – கக்கா போவதை
தடுப்பார் யாருமில்லை…

சிலைகள் அமைப்பதோடு
சிலரின் வேலை முடிந்துவிடுகிறது,
அதை ஒழுங்காய் பராமறிக்க
ஆளில்லாத காரணத்தினால்
சிலைகள் யாவும்
காக்கை குருவிகளின்
கக்கா அபிஷேகத்தில்
தினமும் நனைந்தபடி…;

வருணபகவான்
கருணை காட்டினால் ஒழிய
சிலைகளுக்கு தீர்த்தகுளியல் இல்லை;

எது எப்படியோ மகாத்மா
உன் பிறந்த இறந்த தினங்களிலாவது
உன்னை நினைப்பதற்கு
ஒரு வசதி இருக்கிறதே
அதுப்போதும் நம்நாட்டில்.

எழுதியவர் : இரா.மணிமாறன் (2-Oct-15, 8:07 am)
பார்வை : 62

மேலே