அம்மா மகனிடம்

நீ நினைக்காவிட்டால் என்ன?
நான் தான் நிதமும்
உன்னையே நினைத்துக்
கொண்டிருக்கிறேன்....!
என்னை அழைக்க மறந்தாலும்
உனது பெயரை உச்சரித்து
நான் வாழ்கிறேன்....
நீ என்னுடன் இல்லாவிட்டால் என்ன?
என் சுவாசத்தில் இருந்த நிமிடங்கள்
நினைவுகள் போதும் எனக்கு
என்னை கேட்பவர்களிடம்
மறக்காமல் சொல்லிவிடு
மகனே நான் தனிமை விரும்புகிறேன் என்று.....