மூடன்
இரசாயனம் பூசியே - தன்னை
இரசிக்க வைக்கும் குதூகல
லட்சுமிகள் ஒரு பக்கம்.........
இயற்கையை மாற்றாது - பிறரை
மெய்சிலிர்க்க வைக்கும் குடும்ப
லட்சுமிகள் மறு பக்கம்........
கொடியிடை காட்டி - இளைய
சமுதாயத்தை உருக்குலைக்கும்
முந்தானை அறியாத குதூகல
லட்சுமிகள் ஒரு பக்கம்.........
இடைவெளி அறியா
தன் இடையாயினும் - முந்தானை
நழுவினால் துடித்துப்போகும் குடும்ப
லட்சுமிகள் மறு பக்கம்........
பரிணாமம் வளர்க்க - உரிய
ஆடையை அறியா குதூகல
லட்சுமிகள் ஒரு பக்கம்.........
பாரம்பரியம் காக்க - ஆடையில்
புதிய வடிவமைப்பை அறியா குடும்ப
லட்சுமிகள் மறு பக்கம்........
சேயிற்கு ஆகாரம் அளிக்கும் - தன்
மார்புகளை ஆபசமாக்கும் குதூகல
லட்சுமிகள் ஒரு பக்கம்.........
சேயிற்கு ஆகாரம் அளிக்க - தன்
இடம் பெயரும் குடும்ப
லட்சுமிகள் மறு பக்கம்........
வயிற்றை நிரப்ப - சமுதாய
வியாபரத் தளங்களில்
அங்கங்கள் வெளிகாட்டும் குதூகல
லட்சுமிகள் ஒரு பக்கம்.........
பெருகுடல் சிறுகுடலை உண்டாலும் - தன்
அங்கங்களை மூடிமறைக்கும் குடும்ப
லட்சுமிகள் மறு பக்கம்........
குதூகல லட்சுமியையும்
குடும்ப லட்சுமியையும் - பகுத்தறிய
இயலா மூடனே !..........
இச்சமுதாயத்தில் தான்
அறிந்தோ அறியாமலோ
உனக்கு
காம இச்சையை
கற்பித்த மூடன் எவனோ ?!...........
- தஞ்சை குணா