இதெல்லாம் பேருங்களா ம்--- நல்லா இருக்கய்யா

இதெல்லாம் பேருங்களா? ம்.. நல்லா இருக்கய்யா.

முத்தான மூணு பொண்ணுங்களப் பெத்திருக்கற. அவுங்க பேருங்களச் சொல்லு?

மூத்தவ பேரு கனல். ரண்டாவது பொண்ணு பேரு கன்னல். கடைசிப் பொண்ணு பேரு மின்னல்.

சரி கனல்-ன்னா என்ன அர்த்தம்?

என்னய்யா தமிழனா இருந்துட்டு கனல்-ங்கற சொல்லுக்குக் கூட அர்த்தம் தெரியாம இருக்கற. கனல் –ன்னா நெருப்பு, சிவப்புக் கல், மாணிக்கம்-ன்னு அர்த்தம். சரி மற்ற பேருங்களுக்கு மட்டும் உனக்கு எங்க அர்த்தம் தெரியப்போகுது. அதையும் நானே சொல்லிடறேன். கன்னல்-ன்ன கரும்பு. மின்னல் – மழை பெய்யற போது பளிச்சின்னு மின்னி அப்புறம் பெரிய சத்தமா வானத்திலே கேக்குமே அந்த பளிச்சிடும் கீற்றுக்குத் தான் மின்னல்ன்னு பேரு. கனல்-ன்னா என்னன்னு தெரியாத உனக்கு இதெல்லாம் நான் சொல்லவேண்டியிருக்கு. என்ன செய்யறது . நீயும் தமிழன்னு சொல்லிக்கிற.

ஏய்யா அந்த மூணு தமிழ்ப் பேருக்குப் பதிலா மூணு இந்திப் பேர உம் பிள்ளைகங்களுக்கு வச்சிருக்கலாமே. கனல்-லுக்கு பதிலா ஆகா (आग Āga fire) ஆகா-ன்னும், கன்னல்-லுக்குப் பதிலா கண்ணா (गन्ना Gannā sugarcane) –ன்னும் வச்சிருக்கலாம். மின்னல்-லுக்குப் பதிலா பிஜ்லி ( बिजली lightning) -ன்னு வச்சிருக்கலாம். என்னய்ய பெத்த பிள்ளைகளுக்கு நல்ல இந்திப் பேரா வைக்கத் தெரியாத தந்தையா இருக்கறயே நீ?

தாய் மொழியை மதிக்காத உன்னப் போல ஆளுங்க எல்லாம் உங்களத் தமிழங்கன்னு சொல்லிக்காதிங்க அய்யா. மொழிப் பற்று இல்லாதவர்களுக்கு நாட்டுப்பற்றும் இருக்காது. பொருளியப் பற்று மட்டுந்தாய்யா உனக்கெல்லாம் இருக்கும். தாய் மொழியைப் பழிக்கிறவன் தாயை அவமதிக்கிறவங்கறத மனசில வச்சுக்க.


------------------------------------------
(செம்மொழியாம் நந்தமிழில் அழகான ஆயிரக்கணக்கான பெயர்கள் இருந்தும், திரை ரசனை மோகத்தில் 98% தமிழர்கள் (ஆசிரியர்கள், படித்த படிக்காத மகளிரும் இதில் அடக்கம்) பிள்ளைகளுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டுவதையே பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் தமிழன் என்ற முறையில் வெட்கத்தோடும், ஆதங்கத்தோடும் பெயர்கள் சம்பந்தப்பட்ட இது போன்ற படைப்பை வெளியிடுகிறேன்.


======================
சிரிக்க அல்ல.
சிந்திக்க.
மொழிப் பற்றை வளர்க்க.
பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.
========
எம்மொழிக்கும் எதிரி அல்ல நான். நம் தாய் மொழியைப் பழிப்பவரை மாற்ற நினைப்பவன்)

எழுதியவர் : மலர் (2-Oct-15, 1:33 pm)
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே