500 வது கவிதை -நீல சட்டையும் ரோஸ் வண்ணமும்

சூன்யக் காட்டில்
ஒளி திருடிப் போகிறாய்
கால் வைக்காத இடத்திலும்
முள் தைத்துச் சாகிறேன்....

அருகருகே அமர்ந்த
நாளை புதைத்திட்டேன்
விளைந்த நினைவில்
சிதைந்த கனவாய்
கையோடு கை உரசுகிறது....

எதற்கோ திரும்பிய
நொடி ஒன்றில் மூச்சு
பட்ட இடம் இதயமானது...
விழிகள் பட்ட இடம்
மொழிகளானது....

கூட்டம் கடந்து வந்த
பார்வை- படித்த
பொழுதை ரேகையாக்கினேன்....

பால்கனியின் பல
கதைகளோடு
அருகாமை இடைவெளி
கவிதையாக்கினேன்...

தோள் உரச
நடந்த நாளை நீட்டும் பாதையில்
நீளும் மௌனங்கள்
உனதா..... எனதா...?

அன்று நான் அணிந்த
நீல சட்டையில்
உன்னாடை வண்ணம்
ரோஸ் கொஞ்சம்
கலந்ததை மறந்து போன
மனதுக்கு
நீயே சொல்...
நான் சொல்லி விட்டேன்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (2-Oct-15, 2:32 pm)
பார்வை : 156

மேலே