காதலிக்க நேரமில்லை

நான் பொல்லாதவன் அல்ல .....
போக்கிரியும் அல்ல...
ஆனாலும் என் குட்டி நெஞ்சுக்குள் புகுந்து .....
யாரடி நீ மோகினி? என கேட்க வைத்தாய் .....

உன்னை கண்ட நாள் முதல்...
காதலில் விழுந்தேன்....
இதயம் எனும் பாலை வன சோலையில் ....
காதல் மழை பருவம் தொடங்கியது .....

உன்னால் வித்தகன் ஆனேன்...
குடைக்குள் மழை போல சிதறிபோனேன்...

காதல் அழிவதில்லை என
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
எல்லாம் உன்னாலே உன்னாலே ....

என் அழகிய தீயே?
என் தேவதையை கண்டேன்
காதல் கொண்டேன் ....
நீ வருவாய் என காத்திருந்தேன் ...
உன்னிடம் காதல் சொல்ல வந்தேன்...
ஆனால்
உனக்கு மட்டும் ஏனோ ?
காதலிக்க நேரமில்லை ...?!

எழுதியவர் : ரணதீரன் (3-Oct-15, 3:02 am)
பார்வை : 297

மேலே