அறம் போற்றி வாழ்வோம்
தன் வழியென்றும்
பிறழாமல் சுற்றி வரும்
பூமி போல்
தடைகள் நூறு
கடந்தாலும் ஆழி சேரும்
ஆறு போல்
துளி யொன்று
வீழ்ந்தாலும் துளிர்த்து விடும்
விதைகள் போல்
தோய் வொன்று
கண்டாலும் வளர்ந்து வரும்
நிலவை போல்
நம் பாதை கண்டு
தடைகள் வென்று
மமதை விட்டு
கொடைகள் கொண்டு
மனிதம் போற்றி நின்றிடுவோம்
பார்வையிலே அன்பூற்றி
சிந்தை சலவை செய்துவிட்டு
நேர்மையெனும் கரம் பற்றி
விந்தை பல புரிந்திடுவோம்
எதிர்மறை எண்ணங்களை
புதிர் கொண்ட நிகழ்வுகளை
புறம் ஒதுக்கி தள்ளிடுவோம்
அறம் போற்றி வாழ்ந்திடுவோம்!!!!