ஒழுங்காய் வாழ்ந்துவிட்டுப் போ
மனிதா!
உனக்கு கொடுக்கப்பட்டதோ கொஞ்சநாள்
இதிலென்ன இத்தனை பிரிவினை?
சாதியாம்!
பேதமாம்!
சண்டையாம்!
சச்சரவாம்!
அவன் இவனைத் தொடமாட்டானாம்!
இவன் அவனை விடமாட்டானாம்!
இவன் அவனைக் கொல்வானாம்!
அவன் இவனைக் கொல்வானாம்!
ஏதோ சொன்னதற்காக
வாழ்க்கை முழுதும் பேசமாட்டானாம்!
கோபமாம்!
அதற்கு நீ
விலங்காவே பிறந்திருக்கலாமே!
அருளப்பட்ட கொஞ்ச நாளில்
இதிலேயே நீ நாட்களைக் கழித்தால்
என்று தான் வாழப்போகிறாய்?
வாழும்வரை
இனிமை கொடு!
அன்பை கொடு!
ஆறுதல் கொடு!
குதர்க்கம் அனைத்தையும் விடு!
உலக வாழ்க்கை
உனக்கு கிடைத்த ஆசிர்வாதம்!
ஒழுங்காய் வாழ்ந்துவிட்டுப் போ!
உன் பெயராவது பின்பு வாழும்!!