ஏழை படும் பாடு

ஆண்டவா!

புல்லினை ஜீரணிக்கும்
வயிற்றினை கொடுத்திருத்தால்
பசியின்றி வாழ்வேனே!

காற்றினை அணிந்துகொள்ளும்
திறத்தினை கொடுத்திருந்தால்
மானமுடன் வாழ்வேனே!

பூமியிலே ஊர்ந்து செல்லும்
புழுவாக படைத்திருந்தால்
அடிமை வாழ்க்கை வாழ்வேனோ!?

வானத்திலே பறந்து செல்லும்
பறவையாக படைத்திருந்தால்
துக்கத்துடன் வாழ்வேனோ!?

மொட்டுக்கும் சிரிப்பு உண்டு
என் சிரிப்பை எங்கு வைத்தாய்?
ஏக்கமுடன் தேடவைத்தாய்!

சிறு சிட்டுக்கும் மகிழ்ச்சி உண்டு
என் உணர்ச்சி எங்கு வைத்தாய்?
பசியை மட்டும் உணர வைத்தாய்!

என்
பசிக்கு கூட பசி எடுக்க
பசி மயங்கி விட்டதையா!

பசி மயக்கம் வந்த நானே
பசி மறந்து
பசியைப் பார்த்து
சிரிக்க ஆரம்பித்து விட்டேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Oct-15, 8:54 am)
Tanglish : aezhai patum paadu
பார்வை : 148

மேலே