இப்படியும் எழுதலாம் ஒரு கோடி

”வா” என ”பா” வை அழைத்தேன்..
சிறப்பைத் ”தா” எனக்கேட்டேன் தாகத்தோடு...

“ம்” என மறுத்து ”போ” எனச்சொன்னது
”ஓ” என அழுதது மனது.. ”சோ” எனப் பெய்தன கண்கள்..

”நீ” இல்லையென்றாலும் சரி..
ஈரமான இதயத்தை ”ஈ” என்றேன்...
அது ”பூ” என்றாய்... நான் ”ஆ” நிறையன் சரியாகுமா..? என்றேன்...

சாண வாழ்க்கை அது எனக்கோபம் கொண்டு
”தூ” என்று தூரச்சென்றாய்....
இப்போது தனியே என் ”பூ” உடல். !

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (4-Oct-15, 10:23 am)
பார்வை : 179

மேலே