மகள்

இன்று அதிகாலை
மூன்று மணி இருக்கும்..
யாரோ பொலம்பற சத்தம்!..

என்னடா இது
வழக்கமா நாம தான
தூக்கத்துல உளருவோம்
இது யாரு நமக்கே
போட்டியான்னு பார்த்தா.
அட எம்மவ..

பரம்பர கவுரவத்த
காப்பாத்திட்டடின்னு
பெருமை போங்க
தூங்கு தூங்குன்னு
தட்டி கொடுத்தேன்..

தூங்றேன்
தூங்றேன்ன்னுட்டே
எந்திரிச்சுட்டா..

எழுந்த உடனே அவள் :
‘அம்மா எனக்கு காலைல
நெயில் பாலிஸ் போட்டு விடுவியா?
… சரி
எல்லா விரல்ளையும் போட்டு
கால்லயும் போடணும்"
… சரி
புது டிரஸ் போட்டு விடுவியா?
…..ஹ்ம்ம்
கம்மல்
..அதுவும்
வளையல்
….சரி இப்ப தூங்கு
காலைல செய்றேன்..

எதுக்கு இதுலாம்
தெர்லம்மா!.

நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்
நீங்கள் எவ்வளவு தான்
உங்கள் மகளை புரட்சிகரமாக,
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வளர்க்க ஆசைப்பட்டாலும்
பெண்பிள்ளைகள்
பெண்பிள்ளைகளாக தான் வளரும்..
தகப்பனே வளர்த்தாலும் கூட,

வாழ்க்கை
அதன் போக்கில் செல்லும்,
அதற்கு ஏற்றபடி
வாழ்தலே சிறப்பு.

எக்காலத்திலும்
எதையும்
மாற்ற முடியாது,

மாறினால்
புதியன கழிதலும்
பழையன புகுதலும்
வழுவாகிடும்,

இன்று வாழ்க்கை
ஆரம்பித்த புள்ளியைத்தாண்டி
மீண்டும் வட்டமடிக்கிறது,

இனிப்புதிதாய்
ஒன்றுமில்லை.
வருவதும் இல்லை.

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 9:17 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : magal
பார்வை : 87

மேலே