துரோகம்

ஓசோன் படலத்தின் ஓட்டை
வான்மேகம் அவிழ்க்கும்
அமில மழை
வானிலை அடைந்த
வயோதிக நிலை
அண்டார்டிக்கா கடலின்
திரவ அவதாரம்
துருவ பகுதிகளின்
பருவ மாற்றம்

இவற்றை எல்லாம் விட
துரோகத்தின் ஒரு துளி போதும்
இந்த பிரபஞ்ச முகடுகளை பெயர்த்தெடுக்க.......

எழுதியவர் : வேலு வேலு (4-Oct-15, 3:43 pm)
Tanglish : throgam
பார்வை : 86

மேலே