இயற்கையே நீ

இயற்கையே நீ ? ........
*****************************************

யாக்கை உறுவதும் அழிவதும் இயற்க்கை
பருக்கை அளி கை பயிர் அதும் இயற்கை
வாழ்க்கை அரங்கினில் படுக்கையும் இயற்கை
படுக்கை இடுகையில் கிடக்கையும் இயற்கை
ஒடுக்கையும் நடுக்கையும் உடல் கைக்கு இயற்கை
உடற்கை உதிர்கையில் மறு பிறக்கை இயற்கை
உறைக்க கந்தத்தின் வாசமும் இயற்கை
உரைக்கும் சந்தத்தில் நல் கவிதை இயற்கை
இடிக்கையில் தோன்றிடும் கொடிமின்னல் இயற்க்கை
பெண் கைப் பொன் நகையால் புன்னகை இயற்கை
உடுக்கை சிவபதியின் வெண்பனியும் இயற்கையே

எழுதியவர் : சக்கரைவாசன் (4-Oct-15, 12:19 am)
பார்வை : 972

மேலே