விபத்து

யார் அங்கே...?

சாலையில் பஞ்சு மெத்தையை

போட்டு வையுங்கள்.

மரக் கிளைகளில் இருந்து

விழும் இலைகள்

சாலையில் அடிபட்டு

இறந்து போய் விடுகின்றன.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (3-Oct-15, 10:36 pm)
Tanglish : vibathu
பார்வை : 128

மேலே