கருணைப்போர்
நிலமகள் மீது போர் தொடுக்க....
கருமேகப்படை கடலினை கூட்டிவரும் வானத்தில்
பனிக்கட்டி அஸ்திரம் கொண்டு...
கருணையின் கணை குளிர்நீர்....
இயற்கைவளத்தை உள்ளிறுத்தி புறப்படும்
எதிர்ப்பேதும் இல்லாமல் அத்துணை கனைகளையும்
பூமகள் ஏற்றுக்கொள்வாள் மடிமீது...
கருணைப்போர் வானத்தின் கொடையம்.
பூமித்தாய் உடல்முழுதும் பசுமை பூத்து சிரிபதற்கு.