யோகம் பயில்

உருக்கிய உள்ளங்கலெலாம்
காதலென் றாகலாம்

விருட்டெனும் முத்தங்களில்
விலை தொலைந்து போகலாம்

இருட்டுச் சவால்களில்
இளமைகள் உதிரலாம்

சுருக்கக் கன்னங்களில்
சுகந்த வரி எழலாம்

புருவ மத்தியினில்
உருவ உதயமில் எனில்

பருவம் புதுப்பிக்க
பறந்துவரு மாம் தூது


...மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (6-Oct-15, 11:57 am)
பார்வை : 109

மேலே