மரணம் ஒரு விடுதலை

பயணம் எத்தனை நாள்?
பயணித்த தூரம் பாரமா?
மீண்டும் பயணிக்க ஈர்ப்பா?
எத்தனிக்க எது தடை?

மரணத்தை பார்த்து
ஏன் இத்தனை பயம்?
மரணம் ஒரு விடுதலை,
இத்தனை நாள் உடம்பு கூட்டிற்குள்-

சிக்கித்தவித்த உயிர்
சுதந்திரமாக பறந்து செல்லும் தருணம்..
வாழ்வின் இயல்பு,
வாழ்வின் சுழற்சி,

கீதை சொல்வது ஏற்றுக்கொள்வது
உள்ளுக்குள் மறுதலிக்கும்,
உண்மையில் விழியோரம்
ஈரம் வேறொன்றை சொல்லும்.

யார் யாருக்காக யாருடன்
என்ற வேள்வி முடிந்தது,
பூஜ்யம் விடையானால்
சூன்யமோ வினையாகிறது?

இது தான் என்று தெரிந்தும்
ஏன் அப்படி என்றே கேள்வியும்
அது அப்படித்தான் என்று பதிலும்
தந்து விட்டு செல்லும் வாழ்வு

மெல்ல மெல்ல கொள்ள ஏதுமில்லை எனில்
கொல்வது உத்தமம் உணர்வை உயிரை,
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கிய
கோலம் கலைகிறது, அதுவுமே அழகே
இன்னொரு பிறப்பிற்கு,
அது இன்னும் அழகாகுமே?

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 9:49 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 83

மேலே