வாழ்வு தந்த தெய்வங்கள்

சொல்லுக்கு முன் செயலாக இரு
வில்லுக்கு முன் அம்பாய் இருந்து புறப்படு
குறி எதிரியின் மார்பு புலனாகட்டும்
நெறி தவறாத போர் வீரனாக இரு
சந்ததி காக்க முந்து நீ
சந்நிதி தொழுது சாந்தாமாய் இருந்து விடாதே
முயற்சியின்றி தெய்வ சக்தி உயிர் பெறுவதில்லை
என்றுரைத்து
ஒப்பற்ற இனத்தைக் காப்பாற்ற
உன்னதமாய் கடமை செய்தவர்கள்
இகழ்ந்துரைக்க அனுமதியோம்
புகழ்ந்துரைக்க போற்றுதலானவர்கள்

சாதி ,மதம் பேதமின்றி சரித்திரம் தொட்டவர்கள்
நாதியற்று அலைந்தோரை நல்வழி புகட்டியவர்கள்
சாகா வரம் பெற்ற சரித்திர மனிதர்கள்
வீரம் புகட்டி விண்ணெய்த விண்ணோர்கள்
விடியும் வரை முடியுமென்ற
ஓர்மையுடன் போரிட்டவர்கள்

மரணம் தனதருகே என உணர்ந்தும்
மானமே பெரிதென கொண்டவர்கள்
தமிழன் என்றால் தலைநிமிர்ந்து வாழ்வான்
என இடித்துரைக்க வைத்தவர்கள்

வடியும் குருதியிலும்
வதைபடும் எதிரி குண்டுமழையில்
வாழ்வெனக்கூறி வாழ்ந்தவர்கள்
வடுக்கள் தந்த கொடியோனை
சுடுகுழலால் சுட்டு வீழ்த்தியவர்கள்
விண்ணிலிருந்து விடி வெள்ளியாய்
விடியல் தருபவர்கள்
மண்ணின் மகத்துவத்தை உணர்த்திய மாமேதைகள்
வரலாற்றில் அழியாமால் அமர்ந்தவர்கள்
என்றும் எங்களுக்குள் கடவுளாய் இருப்பவர்கள்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (5-Oct-15, 6:43 pm)
பார்வை : 110

மேலே