கேவலப்படுத்திய காகம்
இதுவரை பாடுபொருளாக
எவரும் பாடாத பறவை
என்று நினைத்து கேலியாக
சிரித்தேன்...
நாயர் கடையின்
வடையை திருடி
போகும்போதும்
ஐயர் ஆத்தில்
காயப்போட்ட
அப்பளத்தை
தூக்கிக்கொண்டு
போகும்போதும்
சலித்துக்கொண்டேன்
இதையெல்லாம்
செய்துவிட்டு
மனிதர்கள் மேலே
கக்காய் போகும்போது
கேவலமாய் உன்னை பார்த்தேன் ..
ஒரு காகம் அடிபட்டது
ஒருஆயிரம் காகம் கூடிவிட்டது
என்னை நினைத்து கேவலப்பட்டு
அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன் ...