வாழ்கிறோம் நாமும்
உன்னைப் பார்க்காத நானும்
என்னைப் பார்க்காத நீயும்
அந்த நாளை..அவசரமாய் முடித்து
அடுத்த நாளுக்காய் ஏங்கிய காலமது..
என்னைப் பார்க்கவே கூட விருப்பமற்று
என்னிலிருந்து நீ விலகிப் போய்..
விடுகதையாவதற்கு முன்னால்..!
விடையை தேடியபடி..
இருவருமே..இன்று வரை ..!
*******
காலம் செய்கின்ற மாயங்களில்
மறைந்து போன ..
நிஜங்களின்
உயிருள்ள அடையாளமான
நீயும்..நானும்..
இங்கும்..அங்கும்..
நிஜமும்..பொய்யும்
கலந்த கலவை வாழ்க்கை..
வாழ்கிறோம்..
கவலை இன்றி..!

