சாகா விதைகள்
சாகா விதைகள்
தேங்காய் உடைத்த பின் தான் அதன் குணம் தெரிவது போல்
தீக்குச்சி யின் உரசலில்தான் அதன் ஒளிரும் நல்ல குணம் நமக்கு புரிவது போல்
புதையுண்ட விதைகள் சாகாமல்
துளிர் த்து மரமாய் வளர்ந்து
கனி கொடுப்பதை போல்...
துப்பல்கள் எச்சங்கள் நீரோட்டத்தில்
திருடும் கழுகுகள் என
எல்லாவற்றையும் தாங்கி தன் குணம் மாறா மணலைப் போல் ...
அசையா பாறை இடுக்கிலும் வேரூன்றி கிளைவிடும்
செடி கொடியைப் போல்...
சிறுத்த அவமானங்கள்
பெருத்த தோல்விகள்
நம்மை வெற்றி பெறச் செய்யவே
மறந்து விடாதீர் !இளைஞர் களே...!
எதிர்கால இளந்தமிழர் களே!
தோல்வியைக் கண்டு கோழையாகாதீர்...
முயற்சி யே வெற்றியின் மூலதனம்
துவண்டுவிடாதீர்.....
வாழ்க தோழர்களே! வளர்ந்து
சாத னை புரிவீர் !
நம் தாய்நாட்டைக் காப்பீர்..!