எல்லாம் ஒரு நம்பிக்கை தான்

பெண்ணென்று யார் சொன்னது இவளை
புயல் என்றே போற்றி இருக்க வேண்டும்..
மொழிக்கு மயங்கும் விழி அல்ல இந்த மடந்தை
விதியை விரட்டியடிக்கும் பெண்மைக்குள் ஓர் ஆண்மை..

இவளுக்கு போட்டு வைத்தது யாரு -அந்த
குறுகலான வட்டம்..
உடைத்து விட்டு வெளியேறுகிறாள் -இந்த
மாஞ்சா போட்ட பட்டம்..

காற்றில் ஆடும் காகிதமோ-இந்த
வண்ணம் கொண்ட பட்டம் ..
இல்லை கயவர் குரல்வளையை நெரிக்க வந்த
நெற்றிக்கண் கொண்ட பட்டம்..

பெண் பூவை கசக்கும் புழுக்களை நசுக்கிடுவாள்..
முதிர்கன்னி உருவாக்கும் வரதட்சணை ஒழித்திடுவாள்..
புகைக்கும் மதுவுக்கும் ஈமச்சடங்கு நடத்திடுவாள்..
அரசியல் கொள்ளை தடுக்க மக்கள் பலம் உணர்த்திடுவாள்..
நாகரீகக்கேடு நகர்வலம் வரும் ஒடுக்கிடுவாள்..
நாட்டுக்கு கேடென்றால் நச்சென்று தட்டிக்கேட்பாள்..
கொடுமை செய்யும் கூட்டத்திற்கு காவு வாங்கும் காளி ஆவாள்..
மனம் திருந்தும் மனிதருக்கு மன்னித்து சாமி ஆவாள்..

இனி பஞ்சாங்கம் தேவை இல்லை
நல்ல நேரம் பார்ப்பதற்கு..
நீதிதேவதை பிறந்திருப்பாள் புதுமை பெண்ணாய்
நம் விதியை மாற்றுவதற்கு..

எழுதியவர் : தீபாகுமரேசன் (6-Oct-15, 10:43 pm)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
பார்வை : 1044

மேலே