ஆத்திரம்

ஆத்திரம்..
இது வந்ததால் ..
வாழ்க்கையின் இருண்ட பக்கங்களில்
தங்களை புதைத்துக் கொண்டவர்கள்
எத்தனை பேர்..?
விளையாட்டு பேச்சு விபரீதமாக
எழுந்து நடந்த கோவலன்
சென்ற திசை கொலைக்களம்
என்பது முதல் ..
அழகிய முகத்தாள்..
அவமதித்தாள்..என்று
ஒருத்தியின் துகிலுரிந்து
தொடை தட்டிய துரியோதனன்
துவம்சமானதும்..
அமிலம் வீசி ..ஆயுளுக்கும்
அல்லல் பட்ட ஒருவனும்..
அன்றாடம்..
எதிரிகளையே உருவாக்கும் அனைவரும்..
அவ்வளவு ஏன்..
அழகிய கவிதைகள் படைப்போரை பார்த்து
நமக்கு மட்டும் ஏன் இப்படி வரமாட்டேன் என்கிறது
என்று எண்ணி எதையாவது கிறுக்கித் தள்ளும்
நான் உள்பட..
எத்தனை பேரை வதைக்கிறது ..
இந்த ஆத்திரம்..?

எழுதியவர் : கருணா (6-Oct-15, 10:04 pm)
Tanglish : aaththiram
பார்வை : 199

மேலே