தோல்வி

நான் தோல்விகளுக்கு தோழன்..

இரண்டு அடி முன்னே சென்றால்
மூன்று அடி பின்னே வரும்
வலுவில்லா வாலிபன் நான்.....

வெற்றி படிகளை நோக்கி முன்னேறினாலும்
வெக்கம் இல்லாமல் தோற்கிறான் என்று
விமர்சிப்பவர்களை கண்டு அஞ்சி நடுங்கியவன் நான்......

தந்தையின் தலை குனிவுக்கும்
அன்னையின் கண்ணீருக்கும்
பதில் சொல்ல தெரியாத மூடன் நான்....

இருப்பினும் நான் விட்டு விடவில்லை
என்றும் எனது முயற்சியை....

கல்லாய் போன கடவுள் கை விட்டாலும்
நான் மண்ணாகும் வரை
எனது முயற்சி என்னை கை விடாது என்ற
நம்பிக்கையில் எடுத்து வைக்கிறேன்
இன்னும் ஒரு அடி முன்னால்......

வெற்றி பெறுபவன் பின்னால் உலகமே போனாலும்
என் பின்னால் என் நிழல் வரும் நம்பிக்கையில்
துணிந்துவிட்டேன், தோல்வி எனும்
கோட்டையை தகர்த்து எரிய.....

நண்பர்களே பிறகு ஒரு நாள்
வந்து சந்திக்கிறேன்..
வெற்றியின் உச்சியை தொட்டுவிட்ட
செய்தியுடன்......

எழுதியவர் : பிரதீப் ரா (7-Oct-15, 11:30 am)
Tanglish : tholvi
பார்வை : 406

மேலே