இன்பமே நம் வாழ்வில் ஹா ஹா - 12341

வருவது வரட்டும் தோழா - நீ
வரிசையில் இரு முதல் ஆளா...!!
வாடியது போதும் இத்தனை நாளா...!!
வாழப் பழகு நீ - இனிமே கூலா......!!
பிரச்சனை வந்தா தோழா - அத
பிரிச்சி ஆக்கிடு தூள் தூளா - முதுகின்
பின்னால் பேசுவோர் நல் நூலா - உன்னை
பின்பற்றி வாழ உருவாக்கு புது ரூலா.....!!
இருக்காதே நீயும் வாழா - தன் நம்பிக்கை
இருக்குது கூர் வாளா - தாழ்வுணர்ச்சி
இனி வெட்டி எரி தோழா - நாளும் இனி
இன்பமே நம் வாழ்வில் ஹா ஹா....!!