தியாகிகள் வாழ்க

இளையோர் கலங்கரை விளக்கு உயர்ந்திட வேண்டும்
முன்னோர் ஈட்டிய பண்பு வழிகள் தொடர்ந்திட வேண்டும்
பழந்தமிழ் மாற்றான் ஆதிக்கத்திலிருந்து அகன்றிட வேண்டும்
பைந்தமிழ் பரவசமாய் பரவிட வேண்டும்

புலமை தந்த பழையோரை புகழை உலகறியச்செய்வோம்
புலமையை உள்வாங்கி நலன் பெறுவோம்
தேன் தமிழை போற்றிகொண்டாடுவோம்
தன்னிரகற்று செயலாற்றுவோம்

பண்பாட்டுக் கலகம்அமைத்து
மேன்மையாய் தமிழை பாடி
தொன்று தொட்டு நாம் வாழ
சான்றாய் விட்டுச்சென்றோர் வாழ்க

தென்னலை அணையாது
தொண்டுகள் புரிந்த எம்மவர் வாழ்க

வளம் பெற பாடுபட்டோர் வாழ்க
களம் சென்று துயர் துடைத்தோர் வாழ்க

ஆடல் ,பாடலுடன் அழகாய் மிளிர்க
மேள தாளங்கள் பண்ணாய் ஒலிர

விதை ,விருட்சம்
முதுமையின் ,புதுமையாக
பாதைபயணம் தவறாது பயணிக்க

சமுக கழகத்தில் அங்கமாய் நாமும்
சமுத்திரம் போன்று களங்கமற்று நாளும்

மாற்றத்தில் நீயும் மயங்கிக்கிடவாதே
சுற்றத்தில் நீயும் ஒற்றனாய் இராதே

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (7-Oct-15, 7:18 pm)
Tanglish : thiyaagigal vazhga
பார்வை : 180

மேலே