நாமும் மரமும்

மரத்தின் கையில்
உருவான நாற்காலியில் அமர்ந்து
எப்படி சொல்லுவது
மரத்தை வெட்டாதீர்கள் என்று?

புகை மண்டலத்தை உருவாக்கும்
இரு சக்கர வாகனத்தில் சென்று
எப்படி வினவ போகிறேன்
சுகாதார வாழ்க்கையைப்பற்றி?

மரத்தின் எச்சத்தில்
உருவான காகிதத்தில்
எப்படி எழுதுவது
இயற்கையைக் காப்போம் என்று?

பசிக்கும் மனிதன்
சாப்பிட போவது பழமா ? பணமா ?

மரம் பொருட்காட்சியில்
பார்க்கும் பொருளாகுமோ?
அது நினைவு சின்னமாகுமோ?
மனிதன் மரணத்திலும்
மரம் தான் எரிய வேண்டுமா?

கேள்விகளிலே குற்றவுணர்வோடு
பயணிக்கும் நாம்
ஒன்றுக்காவது விடை காண்போமா?

எழுதியவர் : மீள் பதிவு (7-Oct-15, 7:46 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : naamum maramum
பார்வை : 189

மேலே