ஓர் ஆலிங்கனத்தின் முடிவில்

ஓர் ஆலிங்கனத்தின் முடிவில்....!!
ஒதுங்க இடம் தேடுவதற்குள்
கட்டித் தழுவிக்கொண்டது
பொல்லாத மழை...!!
வெளிச்சம் போட்டு எட்டிப்பார்த்து
கதவை தாழிட்டுக்கொண்டது
வெட்கத்தில் மின்னல்... !!
ஒதுங்கினாலும் விடவில்லை
விரட்டி வந்து முத்தமிட்டது
காற்றோடு சாரல்..!!
வெட்டவெளி ஆலிங்கன அலங்கோலம்
கோபத்தில் ஆட்சேபித்தது
வானத்து இடி..!!
நனைந்த அங்கத்தை
உலர்த்திக்கொண்டிருக்கிறது காய்ச்சல்
சுருண்ட மரவட்டையாய் நான்..!!