மாற்றங்கள்,,,

காலம் வேக வேகமாக நகர்ந்து கொண்டு செல்கின்றது. அதை போல நமது செயற்பாடுகளும் அதை விட வேகமாகவும் காலத்திற்கேற்பவும் மாறி விடுகின்றது.

நம்முடைய பொழுதுபோக்குகளும் அப்படியே.. மாற்றங்களுக்கு உள்ளாகின்றது. ஒண்ட வந்த பிடறி ஊர் பிடறியை மிதித்ததாம் அந்த கதையாக உள்ளது இப் பொழுதுபோக்குகளின் நிலைமை.
நான் அறிந்தவரை அன்றைய நாட்களில் பொழுதுபோக்கு அம்சமாக முத்திரை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல், கட்டுரை எழுதுதல், சித்திரம் வரைதல், விளையாடுதல், சுற்றுலா செல்லல் என்று சிலவற்றை அடுக்கிகொண்டே போகலாம் ஆனால் இன்றோ.. பொழுதுபோக்குகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது உள்ள சிறுவர்கள் பழைய பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் காட்டுவதில்லை. அவற்றை எல்லாம் அதிக பளு உள்ளதாக பார்க்கின்றனர்.

இப்போது ஆங்காங்கே பொழுதுபோக்கு களியாட்ட விடுதிகள், மக்களை கவரும் விதமாகவும் இலகு படுத்தபடுவதனாலும் மக்கள் அதையே விரும்புகின்றனர்.

இன்னொரு பக்கம் தொலைக்காட்சி, இணையம், முகப்புத்தகம், ட்விட்டர், என நீண்டு கொண்டு போகின்றது. காலம் மாறிப்போவதைப் போல, மரபு – நவீன காலமாக மாறும் போது இதுவும் மாறிப்போகின்றது.

மரபு வழியை விரும்புபவர்கள் இன்னும் பழைய பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நவீனத்தை விரும்புவர்கள் நவினக்காலத்தில் ஒன்றித்துப்போகின்றனர்.

எனினும் நம்மவர்கள் சிலர் இதிலிருந்து ஓரங்கட்டப்பட்டு நடுத்தரமாக இருப்பதையும் பார்க்கிறோம் வெறுமனே சந்திகளில் நின்று அரட்டை அடித்தல், விதவிதமான கைத்தொலைபேசிகளை வாங்குதல், அங்கே இங்கே என்று உலாவித்திரிதல், என்று நீள்கின்றது.

மாற்றங்கள் தொடரட்டும் , நவீனங்கள் தொடரட்டும். எது எப்படியோ பொழுதுபோக்குகள் மனதிற்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் நன்மை பயக்கும் விதமாகவும் இருந்தால் சரியே …

எழுதியவர் : செல்வமணி - இணையம் - முகநூல் (7-Oct-15, 11:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 261

மேலே