பால்யம்
ஐஃபோன் ல நோட் எழுதி வைக்ல, இருந்தும் கணக்கு வாத்தியார் ரெண்டு ஸ்கேல்ல அடிப்பார்ன்ரதே வீட்டுப்பாடத்த ஞாபகமா இருக்க வச்சதது !
பிஸ்சா சாப்டும் போது கிடைக்காது, ஒணுக்கு பீரியட்ல கூரை கடைல மக்காசோளம் வாங்கி சாப்ட சந்தோசம்!
சென்னைல கார்ல வ்ந்து ஷூ,ஸ்டம்ப் எல்லாம் வச்சுட்டு டென்னிஸ் பால்ல கிரிக்கெட் விளையாட்ரத பாக்கும் போது சிரிச்சுட்டே நினைச்சுப்பேன் , மத்தியான
வெயில்ல செருப்பு கூட போடாம, முள்ளு மர குச்சி வச்சி, பேடு ஏதும் இல்லாம கார்க் பால்ல குறுக்கு பாதை கிரவுண்ட்ல கிரிக்கெட் விளாண்டத!
ஐமேக்ஸ் தியேட்டர்ல ஆன்லைன்ல புக் பண்ணி போய் படம் பாத்ததை விட, தேவர் கடைல பரோட்டா எடுத்து வைக்க சொல்லிட்டு, சும்மா சிரிச்சுட்டு வரலாம்னு போய் நரசிம்மா படம் முருகன் தியேட்டர்ல செகண்ட் ஷோ பாத்தது தான் சந்தோசம்!