விழிக்கணை விளையாட்டு

என் இதயம்
பாலைவனம்தான்...
இருந்தாலும்
ஊற்றெடுக்கிறது...
எனைப்பார்க்கும்
உன் விழிக்கணை
துளைப்பதால்.....!

என் நினைவுகள்
சோலை வனம்தான்
இருந்தாலும்
கருகிப்போய்விடுகிறது
உன் விழிக்கணை
என் மீது
விழாமல் போவதால்..!

இந்த எதிரும் புதிருமான
விழிக்கணை விளையாட்டில்
உனக்கு விருப்பமிருந்தாலும்
பலியாவதென்னவோ
என் இதயமும், நினைவுகளும்தான்...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (8-Oct-15, 11:09 pm)
பார்வை : 98

மேலே