உணர்வற்ற உள்ளீடு - தேன்மொழியன்

உணர்வற்ற உள்ளீடு
~~~~~~~~~~~~~~~~

வெள்ளை... சிவப்பில்
வேகமாய் வெடித்து
வெட்கம் தவிர்த்து
அடிமையென அயர்ந்தோம்
கண்ணாடிப் பெட்டிக்குள் ...

ஒளிக்கதிர் உரசலும்
ஒவ்வாமை உடலாகி
முயலாமை நிஜமாகி
உறவை உரித்த உணர்வில்
சுழலும் விரலாய் சுயநலம் ..

உயிரற்ற பிம்பத்தில்
உணர்வற்ற உள்ளீடாய்
உதிரம் உமிழ்ந்த
துரோக குமிழ்கள் ...

ஏர்முனை உடைத்த
கானல் கனவினில் ...
காகித மொழிகளும்
விற்பனை வழிகளில் ...

- தேன்மொழியன்

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார் ) (9-Oct-15, 8:23 am)
பார்வை : 84

மேலே