பூவழகி கவிதை

பூவழகி…!!
*
அழகிய மலரே அழகிய மலரே
காற்று உன்னைத் தழுவக் கண்டேன்
பனியில் குளிரில் நடுங்கும்போது
போர்வையில்லாமல் வாடக் கண்டேன்
ஆசையாய் பறித்து உள்ளங்கையில்
அணைத்துக் கொண்டு, மெல்லிய
விரல்களால் போர்த்தி விட்டேன்.
பொன்மேனி சிலிர்க்கக் கண்டேன்
என் உள்ளத்தில் நீயோ நறுமணமாய்
புகுந்துக் கொண்டாய். பூவழகி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (9-Oct-15, 9:15 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 113

மேலே