பிரிவு

இமைகள் பிரிந்தால் காட்சி
இதழ்கள் பிரிந்தால் வார்த்தை
மொட்டு பிரிந்தால் மலரும் வாசனையும்
இருள் பிரிந்தால் விடியல்
விதை பிரிந்தால் விருட்சம்
இயற்கையின் பிரிவுகள்
அனைத்தும் ஒரு அழகின் துவக்கம்
ஆனால்
மதம் , மொழி, இனம் என்று மனிதன்
உண்டாக்கிய பிரிவுகள் ....
எதை நோக்கி