என் நண்பரே

வைக்கோல் போரில் ஏறி
டைவ் அடித்து இருக்கிறீர்களா ?

பச்சை நெல் பிடுங்கி கடித்து
பால் குடித்து இருக்கிறீர்களா ?

புறாவின் கொத்தை கன்னத்தில் வாங்கி
புளகாங்கிதம் அடைந்தது உண்டா?

லாரி டியுப்பில் அமர்ந்து
குளத்தில் நீந்தியதுண்டா ?

கோயில் குருக்களிடம் பூவரசு இலை நீட்டி
பொங்கல் வாங்கி சாப்பிட்டதுண்டா ?

வயற்காட்டில் மேயும் எருமை யின் முதுகில் படுத்து
புத்தகங்கள் வாசித்ததுண்டா ?

முதன் முதல் போட்ட தார் ச் சாலையில்
செருப்பின்றி நடந்ததுண்டா ?

குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டி
குளத்துக்குள் விழுந்ததுண்டா ?

ஆடு மேய்க்கப்போன தனலச்சுமியுடன் கைகோர்த்து
தண்டவாளங்களில் நடந்ததுண்டா ?

''ம்ம்...''என்றால்
நீங்கள் என் நண்பரே..

'இல்லை ''என்றாலும்
நீங்கள் என் நண்பரே. [மதித்து ,பதில் சொன்னமைக்காக]

எழுதியவர் : செல்வமணி (9-Oct-15, 9:27 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : en NANBARE
பார்வை : 68

மேலே