அய்யாஒரு நிமிடம்
மனிதா என்னைக் கொல்லாதே
மரமே என்று தள்ளாதே
இனிதாய் மேகம் தருவேனே
இன்னீர் ஈந்து அருள்வேனே .
வானச் சூரியன் உன்னை
வாட்டி வதைக்கக் கண்டு
ஓசோன் மண்டலம் தந்து
உனைக் காப்பதுநா னேநம்பு.
ஆலைசாலை விடும் புகையை
அசுத்தக் காற்று டை ஆக்சைடை (கார்பன்-டை -ஆக்சைட்)
சுத்திகரித்து பிராண வாயுவை
சுற்றிலும் உனக்குத் தருவேனே .
என்னிடம் ரெத்தம் இல்லை
என்னை வெட்டிப் போட்டால்
உனக்கு ரெத்தம் இல்லை
உனக்கீது தெரிய வில்லை.
உலகில் தாவரம் முதலானது.
ஊர்வன பறப்பன அடுத்தானது
மிருகக் கூட்டம் உருவானது
மனிதன் அப்புறம் கருவானது
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
கூடப் பிறந்தவன் நீயடா
கூடப்பிறந் தவனை வெட்டுவது
குற்றம் புரிவது போலடா.
மனிதா என்னைக் கொல்லாதே
மரமே என்று தள்ளாதே
இனிதாய் மேகம் தருவேனே
இன்னீர் ஈந்து அருள்வேனே .