சொல்லாத காதலும் சொர்க்கம்தான்...

நீ போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும் பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...
தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...
இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்...
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...
சொல்லாத காதலும் சொர்க்கம்தான்...
நீ எனக்கில்லை என சுடும் அந்த நொடிகளை தவிர.....!!!

எழுதியவர் : ரெங்கா (2-Jun-11, 11:51 am)
சேர்த்தது : renga
பார்வை : 523

மேலே