என்றும் உன்னினைவால் நான்

யாரென்று தெரியாமல் பேச்சை தொடர்ந்தேன்
யாரிடமும் கேட்காமல் உன்னைத் தொடர்ந்தேன்

நான்கு கண்கள் பார்த்தல் பொன்சிரிப்பு
இரண்டு கண்கள் பார்த்தல்
இரசிப்பு

என்வழிப் பாதையில் உன்னை எதிர்பார்கிறேன்
உனைக்கானா நாட்களில் மௌனமாகிறேன்

தூரத்தில் இருந்தும் உடனிருப்பதாய் உணர்கிறேன்
அருகில் இருந்தும் மெய்பேசாமல்
மறைகிறேன்

அதிகம் பேசாத நானே பேசுகிறேன்
அதிரடி நீயோ ஓரிரு வார்த்தை ஏனோ!

நீ எனக்கு வேண்டுமென்று சொல்லவில்லை
வேண்டாமென்றும் சொல்லவில்லை

"உன்னை எனக்குப் பிடிக்கும் அதை
சொல்வதில்தானே தயக்கம்"

தினசரி வேலையில் பிழை செய்கிறேன்
எல்லாம் நீயே என்ற எண்ணம் எப்போதும் உன்னினைவுதான்

என்சிரிப்பு, சந்தோசம், ஆட்டம், பாடல்,
கனவு, அலங்காரம் எல்லாவட்டிற்கும்
நீயே நீ மட்டும்தான்...

உன்னிடம் எதுவும் சொல்லமாட்டேன்
உன்னிடம் எதுவும் எதிர்பார்க்கமாட்டேன்
என்றும் உன்னினைவால் நான்...

எழுதியவர் : கறுப்பன் (11-Oct-15, 11:33 am)
பார்வை : 250

மேலே