உனது இரவுகளில் சூரியன்

உனது இரவுகளில் சூரியன்


தமிழுக்கு காமம் உண்டு என்றறிந்தேன்
உன் வார்த்தைகளில் .

புல்லாங்குழல் காட்டுக்குள்
வீணை இசை மலரும் ஆனந்தம் அனுபவித்தேன்
உன் உயிருக்குள் நான் நுழைந்த போது .

என்னைச் சுற்றி பட்டாம் பூச்சிகள்
என் நரம்புகளில் உன் குருதி வார்த்தைகள் .

என் செவிகளில் இதயம் பிறந்தது
குயிலைப் பழிக்கும் உனது குரலால் .

லட்சம் லட்சம் பூக்களில் தேனெடுக்கும் தேனீ யாய்
உன் வார்த்தை மலர்களில் இருந்து
சேமிக்கிறேன் காதல் .

உன் நினைவுகளால் என் வியர்வை துடைக்கிறேன்
ஊறிக் கொண்டிருக்கிறாய் கிணறுகளாய் .

மணல் வேலிக்குள் நின்று கொண்டு
உன் காதல் தவிக்கிறது
புரிந்து கொள்
காதல் சிறகு .

உனது இரவுகளில்சூரியன்
காதல்

உனது கனவுகள்
நான் பார்க்கிறேன்
எனக்காகத் தூங்குகிறாய் நீ .

காதல்
வேலி அல்ல

காதல் மிக நீண்ட வெளி
கால்கள் தருகிறேன் வா நடந்து செல்வோம் .

எழுதியவர் : ராஜகவி ராகில் (11-Oct-15, 12:19 pm)
சேர்த்தது : நிந்தடஹசன்
பார்வை : 102

மேலே