‎இலவசம்_ஆபத்து‬

சிந்திக்க வைக்கும் புதிய நீதி கதை!!!!!

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.
நீதி:
இலவசம் ஆபத்து.

எழுதியவர் : செல்வமணி (12-Oct-15, 3:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 126

மேலே