என்னவளே எங்கே நீ இப்போது

என்னவளே!!
என் இதயம் இடம்மாறும் தடம் தேடி
-அலையுதடி!!
என் உயிரோ உனைத்தேட
என் கூடு மட்டும் இங்கு தனித்து தவிக்குதடி!!
உன்னை கண்ட நாள்
இன்று கண்ணுறங்க மறந்தேனடி!!
என் குருதியும் தவிக்குதடி
உன் நினைவை சுமக்க!!
உள்ளுக்குள் ஊருதடி
உன் நினைவு எண்ணங்கள்!!
சூரிய உதயம் வரை காத்திருக்க முடியாது
வலியால் துடிக்குதடி என் இதயம்!!
உறக்கம் துளைத்து அலைகிறேன் நானோ
உன் நினைவின் கரம் பிடித்து!!
என்னவளே எங்கே நீ இப்போது???