மனித ஒழுக்கத்திற்கு எதிரான செயல்கள் - சிஎம்ஜேசு
அடி தடி மோதலும்
ஆயுதம் உடன் ஏந்தலும்
கிடைக்கும் இடமெல்லாம்
கிறுக்கலும் எச்சில் துப்பலும்
குரல் உயர்த்தலும்
கூவி அழைத்தலும்
குடி பீடி பீடா பாக்கேன - தலை
குனியும் செயல் பழக்களும்
மங்கையர்செயின் அறுத்தலும்
மதயாணை செயல் புரிதலும்
மாந்தர் தாம் கூடும் இடங்களில்
காம செயல் செய்தலும்
விரோத செயல் புரிதலும்
விட்டு கொடுக்காத நிலை வருதலும்
பிறர் பதறி கதறி அழுதிட - அவர்
பாக்கேட் பர்ஸ் திருடலும்
முண்டி அடிப்பதும்
மூர்க்கத்தனமாய் நடப்பதும்
மூளையை கசக்காத
வேலைகளைச் செய்வதும்
கிண்டலும் கேலியும் செய்து - பிறரின்
மரியாதையைக் குறைப்பதும்
பொய்யும் புரட்டும் செய்து
மற்றவர்க்கு உரியதை தட்டிப்பறிப்பதும்
ஆன்மிகம் அற்றலும்
அனைத்தும் எனக்கென்று நினைத்தலும் - ஆக
வாழ்வதெல்லாம் மனித
வாழ்வின் தீமைச் செயல்களாகும்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * தொடரும் ..